Friday, 12 August 2011

கார்ல ப்ருணி




கார்ல ப்ருணி இவர் பிரான்ஸ் அதிபர் சர்கோழியோட மனைவின்னு பலருக்கும் தெரிஞ்சு இருக்கலாம்,கார்லவோட இன்னொரு முகம் பிரமாதமான பிரெஞ்சு பாடகி,அனகம இவோரோட பாடலால தான் சர்கோழி சருகீருபரோ..........,சரி விடுங்க சர்கோழி  சர்கினரோ பல்டி அடிச்சாரோ,அம்மணியோட பாடல் கிழே உள்ளது சும்மா சொடுக்குங்க  









Thursday, 11 August 2011

The One Straw Revolution-Masanobu Fukuoka

தமிழில்ஒற்றை வைக்கோல் புரட்சி-மசானபு ஃபுகோகா எழுதியது,இவர் ஒரு ஜப்பானிய விவசாயி இயற்கை வேளன்மைல பல புரச்சிகரமான விஷயத்த உலகத்துக்கு அறிமுக படுதியாதோடு,செயல்படுத்தியும் இருக்கிறார்,இயற்கை வேளண்மைய பத்தி பரவல இப்போ பேசுறாங்க சில பேரு நடைமுறையும் படுத்திட்டு  இர்ருகங்க,நான் இந்த புத்தகத்தே படிக்ரதுக்கு முன்னாடி இயற்கை விவசாயம்  பண்ணின அற்புதமான சேவையும் பண்ணின மாதிரியும்  ஆச்சு  இயற்கை விவசாய  பொருள சந்தைல வழக்கமான  காய்கறிகள் விலைய விட நல்ல விலைக்கு விர்கலமுனு  நினச்சுட்டு இர்ருந்தேன்(இந்த புத்தகத்தே படிச்சதுக்கு பிறகு என் கருத்தை மத்திக்கிடேன்),இந்த புத்தகத்துல ஒரு பக்கத்துல மசானபு தோட்டத்தில விளைஞ்ச காய்கறிய கம்மியான விலைக்கு  வாங்கிட்டு அதை வியாபாரி ஒருவர் வழக்கமான காய்கறிகள் விலையா விட பல மடங்கு அதிகமா விக்கறதே  கேள்வி பட்டு அவுர் கிட்ட இயற்கை விவசாயத்துல விளஞ்சதே கம்மியான விலைக்கு  தான் விக்கணும் என இயற்கை விவசாயம் கம்மியான செலவு தான் அகுதும்பார்,இயற்கை விவசாய பொருள இவளவு அதிகமா விற்று லாபம் பாக்க ஆரம்பிச்சாங்கனா கம்மியான விலைக்கு செயற்கை ஓரம் போட்டு வாங்குன காய்கறிய இயற்கை விவசாயத்துல  விளஞ்சுதுன்னு  கலப்படம் பண்ணிருவங்கேனு சொல்லி இருக்கிறார்.

                                                                                                                                  
                    இவர் இதுல நிறைய தெரியதா விஷயத்த பத்தி சொல்லி இருக்கிறார் பொதுவா தோட்டத பாரமரிகிறதா சொல்லிட்டு மரத்தோட கிளைய வெட்டுறது அநாவசியம்,இப்படி கிளைய வெட்டுன அந்த மரம் சிக்கிரம் சிக்கு புடிச்சி இறந்துரும்,உழுவதே தேவை இல்லை,அப்படி உளுதொம்ன சிக்கிரம் களை வரும்னு சொல்லறாரு ,எப்பாச்சு கொஞ்சம் களை எடுத்த போதும்னு சொல்லி இருகரு,இவரோட விவசாயம் இயற்கை விவசாயமுனும் அல்லது எதுவும் செய தேவை இல்லாத விவசாயமுனும் சொல்லு வாங்க,இவருக்கு இந்திய அரசாங்கம்1988 இல் மிகவும் மரியாதைக்குரிய விருதான தேசிகொட்டன் விருது அளித்து கெளுரவுசிருகாங்க,இந்த புத்தகத்தை பத்தி சொன்ன விஷயம் ரொம்ப,ரொம்ப கம்மி,இந்த புத்தகம் மிகவும் சுவாரசியமான புத்தகம்,இயற்கை விவசாயத பத்தி நெறைய கட்டுரைகள படிச்சிருந்தாலும் இந்த புத்தகத்துல உங்களுக்கு பல ஆச்சிரியமான விஷயம் நிறைய இறுக்கு,படு சுவாரசியமான புத்தகம் பக்கமும் கம்மி கண்டிப்பா படிங்க.
                                             சின்னதா  ஒரு  சாம்பிள்  




 கொசுறு:விலை 80  ருபாய் மட்டுமே, இப்போ IT துறைல இருந்தாலும்  எதிர்கலதுல உங்களுக்கு உதவலாம்,என்னா ஷேர் மார்க்கெட் சகாப்தங்கள் எதிர்கலதுல மிக,மிக முக்கியமான துறைய விவசாயம் விஸ்வருபம் எடுக்குமு திரும்ப திரும்ப சொல்லராங்க,முதலிடும் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.











Wednesday, 3 August 2011

இது விமர்சனம் இல்லைங்க...........................

 பிரகிங் அவே (1979)ஆண்டு வெளி வந்த அமெரிக்க சினிமா,பீட்டர் யேட்ஸ் இயக்கி இருக்கிறார்,இந்த படத்தோட ஸ்க்ரீன் ரைட்டர் ஸ்டிவு ட்ஸிச், இந்த படம் உண்மை சம்பவத்தை  பின்னணியாக கொண்டது,இந்த படத்துல வர ஒரு அல்டேர்ணட் ரைடர் கதாபத்திரம் ஸ்டிவு ட்ஸிச் உடையது,இவருடை நண்பர் Dave blase தான் கதையோட முக்கிய கதாபாத்திரம் இவங்களோட பதின்ம வயதில் நடந்த கதை தான் இந்த படம்,இந்த படத்துக்கு பெஸ்ட் ஒரிஜினல் ஸ்க்ரீன் பிளேவுக்கு அகாடமி அவார்ட் வங்கி இருக்கிறார்,இவர்  அமெரிக்கன் flyers  படத்துக்கும்  கதை எழுதி  இருக்கிறார்
                                                                
                                                     Dave Blase

This year marks the 30th anniversary of the Little 500 movie 'Breaking Away,' based on the 1962 tThis year marks the 30th anniversary of the Little 500 movie 'Breaking Away,' based on the 1962 triumphs of David Blase. Now 69, he still rides 200 to 300 miles a weekriumphs of David Blase. Now 69, he still rides 200 to 300 miles a week





dave christoper இந்த படத்தோட கதாநாயகன்(dave blase பாத்திரம்) பிரமாதம நடித்திருப்பர் இவர் ஸ்டார் ட்ரெக் தொடரில் கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார்
                                      
                                              நண்பர்களுடன் dave christoper

                                              

இவர்களுடைய opponent மற்றும் dave christoperன் சைட் 


இந்த படத்துல dave christoper அவரோட நண்பரோட போயி அவரோட காதலிய இம்ப்ரெஸ் பண்றதுக்கு கிடார் வாசிப்பர் (நம்ம தெலுகு ஆர்யா படத்தில இந்த காட்சிய காபி செய்து  இருபாங்க  தமிழிலும் ) இந்த படம் பள்ளி மற்றும் கல்லுரி  காலத்தை ஞாபகபடுத்தும்
குறிப்பு:இந்த படம் அமெரிக்காவுல வெளிவந்த மிகவும் உத்வேகம் அளிக்ககூடிய 100 படங்களில் 8வுது அக தேர்வு செய்யபட்டுள்ளது    


நேரம் இருந்த  இந்த வாரம் பிரகிங் அவே படதே கண்டிப்பா பாருங்க,படத்தோட trailer 


பிரகிங் அவே படத்தபார்த்துட்டு இந்த லின்க்கை சொடுக்கவும் http://govenkygo.blogspot.com/

Tuesday, 2 August 2011

கிம் கி டுக்

கிம் கி டுக் உலக சினிமாவில் தற்போதய மிக சிறந்த இயக்குனர்களில்  ஒருவர் இவரை பற்றி  கருந்தேள் இணையத்தளத்தில் இருந்து தான் தெரிந்து கொண்டேன், வித்தியாசமான இயக்குனர் இவர் அப்படி என்ன தான் இயக்கி இருக்கிறார் என்று தான் 2003 ஆண்டு வெளி  வந்த சமரியா(samaritan) படம் பார்த்தேன்,இந்த படத்துல பக்கம் பக்கமா வசனம் இல்லை அனா  பார்வையாளர்களை  சில காட்சில மிரள வேச்சிருவர் இவரோட படத்துல முக்கியமான கதாபத்திரம் என்ன பண்ணுவகேன்னு  யாராலேயும் யூகிக்க  முடியாது உலக சினிமா பத்தி கொஞ்சம் கூட   அறிமுகம் இல்லாம பார்தங்கான  இப்படியும் கூட யோசிபங்கலன்னு ஆச்சரியத்தோட எல்லைகே போயிருவாங்க,இந்த படத்துல  தந்தை கதாபத்திரத்தை பிரமாத காட்சி படுத்தி இருபங்க,மகள் அடுத்து அடுத்து தவறு செய்யும்போது அதை தடுக்க அவளுடைய தந்தை படிபடிய உக்றம் ஆகுற காட்சி நல்ல இருக்கும் ,நீங்க எதாவுது உலக சினிமாவ பத்தி பாக்கணும்ன கருந்தேளோட(இவர் கோயம்புத்தூர் காரருங்க)  இணையதலாதே பாருங்க கண்டிப்பா உங்களுடைய ஆர்வத்தே  பூர்த்தி பண்ணுவார்,இவர் உலக சினிமா தமிழ்  இணையதள ராட்சசன்,கிம் கி டுக் பற்றி மேலும் அறிய லிங்கை கிளிக்கவும்  http://www.karundhel.com/2010/07/samaritan-girl-2004-south-korean.ஹ்த்ம்ல் 







குறிப்பு கிம் கி டுகோடா இரண்டு படமாவது பாருங்க  (மிதி கிம் கி டுக் அல்லது தேளு பார்க்க வேச்சிருவர்) சமரியா,டைம் இவரோட  சமரியா படம் தான் கொஞ்சம் டரியல் கட்சி கம்மிய  இருக்கும் அனா படாதே பார்த்திங்கன இதோட பாதிப்பு விலக இரண்டு  வாரமாவுது ஆகும் 

அல்பிரேட் ஹிட்ச்காக்

அல்பிரேட் ஹிட்ச்காக் பெயரை  சொனாலே மயிர் குச்சறியும் திகில் திரை பட உலக  மன்னன் இல்லை மன்னர்களின் மன்னன் அனேகம இது தான் கொஞ்சம் சரியாய் இறுக்கும் யாராசுகும் adrenalin செயற்கைய சொர்ராக வெக்கணும்ன கண்டிப்பா இவரோட  திரைபடத்த பார்க்கணும் நான் இவரோட pshyco திரைபடத்த HBO ல தான் முதல் முதல பார்த்தேன் தனியாக நடு இரவில்  இந்த படத்தோட தழுவல் தான் சிவப்பு ரோஜா ,மூடுபனி,மூடுபனி ல கொஞ்சம் நல்லவே தழுவி இருபாங்க   இந்த படத்தோட பின்னணி இசை  நெஞ்சு எலும்புக்குள விட்டு வயோலின் வாசிகிறமாதிரி  இறுக்கும் பிரமாதம  இசை அமைப்பாளர் கிட்ட வேலை வாங்கி இருப்பர் ஹாலிவுட் படமும் நம்ம  ஊரை போலத்தான் மணி-இளையராஜா,சங்கர்-ரஹ்மான்  போல அல்பிரேட் ஹிட்ச்காக்-பெர்னார்ட் ஹெர்மன் இவங்க கூட்டணி வெர்டிகோ நார்த் பய் நார்த் வெஸ்ட் போன்ற பல படத்துல கலக்கி இருபாங்க,பெர்னார்ட் ஹெர்மனடோ அப்பா தான் இவரை வயோலின் வசிக்க உத்வேகம் அளித்தாராம் அதுக்கபுறம் தான் ரசிகர்களோட நெஞ்சு எலும்புக்குள விட்டு வயோலின் வாசிசிருக்காரூ  இவரோட pshyco பின்னணி இசையை தான் Mr .Bean ல் பகடி செய்து இறுபார் சரி அல்பிரேட் ஹிட்ச்காக்-பெர்னார்ட் ஹெர்மன் அறிமுகம் போதும் நினைக்கறேன் மேலும் அல்பிரேட் ஹிட்ச்காக் படத்தை பற்றி அறிந்து கொள்ள கிழ்காணும் லிங்கை கிளிக்கவும் 


http://pitchaipathiram.blogspot.com/2010/09/blog-post.ஹ்த்ம்ல்


குறைந்த பட்சம் ஹிட்ச்காகோடா  முன்று  திரைபடமாவுது பாருங்க  பாருங்க குறிப்ப pshyco ,birds ,rear window நடு இரவில் தனியாக(Effect நல்ல இருக்கும் ) காண தவறாதிர்கள்